புக்கிட் பாத்தோக்கில் நிலத்தடிக் குழாய் உடைந்தது

புக்கிட் பாத்தோக்கில் நிலத்தடிக் குழாய் உடைந்தது

1 mins read
e9746589-90b7-4338-8d38-84383aa0ff6c
புளோக் 639 பூக்கிட் பாத்தோக் சென்ட்ரலில் உள்ள ஒரு வீடும், அருகிலுள்ள புளோக் 636, 637 ஆகியவற்றிலுள்ள வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. - படம்: ஷின் மின் நாளிதழ்

புக்கிட் பாத்தோக்கில் உள்ள நிலத்தடிக் குழாய் உடைந்ததால், மூன்று  அடுக்குமாடி வீட்டுப் புளோக்குகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாகத் தடைபட்டது. சனிக்கிழமை அதிகாலையில் (செப்டம்பர் 12)  இந்தச் சம்பவம் நேர்ந்தது.

புளோக் 639 புக்கிட் பாத்தோக் சென்ட்ரலில் உள்ள ஒரு வீடும், அருகிலுள்ள புளோக் 636,637 ஆகிய வீடுகளில்  உள்ள வணிக நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்பட்டன.

 ஜூரோங்-கிளமெண்டி-புக்கிட் பாத்தோக் நகர மன்றம் செய்தி ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில்  அளித்தபோது அவ்வாறு கூறியது.

அக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை, புளோக் 636, 637 ஆகியவற்றில் உள்ள 11 கடைவீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடைகளுக்கான தண்ணீர்த் தொட்டிகளை நிரப்ப குழாய்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

“இந்தக் கடைகளிலும் வீடுகளிலும் உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று உறுதியளிக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாகப் பாதிக்கப்பட்ட குழாயைத் தனிமைப்படுத்தி, அந்த வீட்டிற்கான குடிநீர் விநியோகத்தை சீரமைத்ததாக நகர மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு அளித்த பதிலில் கூறினார்.

மேலும், அந்த நேரத்தில் செயல்படாத வணிக நிறுவனங்களுக்கு நீர் விநியோகத்தை மீண்டும் வழங்க நகர மன்றம் தற்காலிகமாக மேற்பரப்புக் குழாயை நிறுவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்