வரும் பொதுத்தேர்தலில் ஜூரோங் ஈஸ்ட்- புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில் போட்டியிடும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி தனது வேட்பாளர்களைப் புதன்கிழமை (ஏப்ரல் 16) அறிவித்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட அந்த ஐவர் குழுத்தொகுதியில், தேர்தல் பின்னணி கொண்ட இருவர் ஒன்றுபட்ட சிவப்பு புள்ளிக் கட்சியின் வேட்பாளர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
திரு ஒஸ்மான் சுலைமான்,50, கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.
தொழில்முனைவரும் எழுத்தாளர்ருமான லியானா தாமிரா, 38, இதற்கு முன்னர் 2020 பொதுத்தேர்தலில் போட்டியிட்டவர்.
கலைஞர் பென் புவா, 48, மார்க்கஸ் நியோ,33, மென்பொருள் பொறியாளர் ஹரிஷ் மோகன்தாஸ், 39, ஆகியோர் மற்ற மூன்று வேட்பாளர்கள்.
இந்நிலையில், ஜூரோங் சென்ட்ரல் தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரையும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி அறிவித்துள்ளது.
அந்தத் தனித்தொகுதியில் பியானோ ஆசிரியரான எமிலி வூ, 59, போட்டியிடுகிறார்.