தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதல் பிரசாரத்தில் அடிப்படை விவகாரங்களை எழுப்பிய ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி

2 mins read
495d0896-79ac-4332-8d80-7b5e89149d25
புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியில் பிரசாரக் கூட்டத்தில் பேசினர் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் வேட்பாளர்கள். - படம்: சாவ்பாவ்

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி வேட்பாளர்கள் கட்டுப்படியான விலையில் கழக வீடுகள், வாழ்க்கைச் செலவினம் ஆகிய அடிப்படை விவகாரங்களைக் கட்சியின் முதல் பிரசாரக் கூட்டத்தில் (ஏப்ரல் 26) முன்வைத்தனர்.

புக்கிட் பாத்தோக்கில் உள்ள புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. 

அதில், அன்றாடம் தேவைப்படும் பொருள்களை வாங்க சிங்கப்பூரர்கள் எவ்வாறு அரசாங்கப் பற்றுச்சீட்டுகளைச் சார்ந்திருக்கவேண்டிய நிலை உள்ளது போன்ற உதாரணங்களைக் கட்சியின் 15 வேட்பாளர்கள் முன்வைத்தனர். அதிகரிக்கும் வீட்டு விலைகளால் சிலர் மலேசியாவில் தங்க நேரிட்டது, பெருவிரைவு ரயில்களில் ஏற்படும் இடையூறுகள் போன்றவற்றையும் அவர்கள் சுட்டினர்.

வேட்பாளர்களில் சிலர் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூரர்கள் எதிர்கொள்ளும் விவகாரங்களுடன் தொடர்பில் இல்லை என்றும் கூறினர்.

ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி வேட்பாளர் ஹரி‌ஷ் மோகனதாஸ் தொகுதி உலாக்களின்போது மக்களிடம் பேசியதில் தங்கள் வாழ்க்கை மீதும் வாழ்வாதாரம் மீதும் கட்டுப்பாட்டை இழந்ததைப் போல உணர்வதாக அவர்கள் கூறியதாகச் சொன்னார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் விலை குறித்தும் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளால் வீடுகளை வாங்க முடியுமா என்றும் சிலர் கவலையடைந்திருப்பதையும் திரு ஹரி‌‌ஷ் முன்வைத்தார்.

நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிடும் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் ரவி ஃபிலமன், முனைவர் பட்டம் பெற்றோர், தொழிற்துறைத் தலைவர்கள், தொழில்முனைவர்கள் ஆகியோருடன் பல பின்னணியைச் சேர்ந்த அணியை சிங்கப்பூரர்களிடம் முன்வைப்பதாகச் சொன்னார்.

“மாறாக மக்கள் செயல் கட்சி வேட்பாளர்கள் ஒரே பின்னணியிலிருந்து வந்தவர்கள், செல்வந்தர் வகுப்புடன் அதிகம் தொடர்புபடுத்திக்கொள்பவர்கள். அவர்கள் உங்கள் வாழ்க்கையைச் சிறப்பானதாக மாற்றப்போகிறார்களா?,” என்று திரு ஃபிலமன் சொன்னார்.

ஜூரோங் சென்ட்ரல் வேட்பாளர் கலா மாணிக்கம், சிங்கப்பூரர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க எதிர்க்கட்சிகள் அவசியம் என்றார். “எதிர்க்கட்சிகள் நாட்டின் காப்புறுதியைப் போல,” என்ற அவர், “நெருக்கடி காலத்தில் நமக்கு மாற்றுவழி தேவை,” என்றார்.

ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதியில் போட்டியிடும் கட்சியின் ஆக இளைய வேட்பாளர் ஷரத் குமார், தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளைத் தனியார் வாங்க ஏன் 35 வயது வரை காத்திருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

குறிப்புச் சொற்கள்