குறைந்த நிகர வட்டி வரம்பை எதிர்பார்க்கும் யுஓபி வங்கி

1 mins read
5994596b-29b8-4be6-af88-36cf77f5b29b
சொத்துகள் அடிப்படையில் தென்கிழக்காசியாவின் மூன்றாவது வங்கியான யுஓபியின் ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான நிகர லாபம் $443 மில்லியனாகக் குறைந்தது. - படம்: தி பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் யுஓபி வங்கி, இவ்வாண்டின் நிகர வட்டி வரம்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. இந்தத் தகவலை அது வியாழக்கிழமை (நவம்பர் 6) வெளியிட்டது.

தனது மூன்றாம் காலாண்டு லாபம் வெகுவாகச் சரிந்ததை அடுத்து யுஓபி வங்கி இவ்வாறு தெரிவித்தது.

சொத்துகள் அடிப்படையில் தென்கிழக்காசியாவின் மூன்றாவது வங்கியான ஓயுபியின் ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான நிகர லாபம் $443 மில்லியனாகக் குறைந்தது.

ஓராண்டுக்கு முன்பு அது $1.61 பில்லியனாக இருந்தது.

கடன்கள் மற்றும் இதர இழப்புகளுக்கான $1.36 பில்லியன் பெறுமானமுள்ள படித்தொகை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஈவுத்தொகைத் திட்டங்கள் தொடர்ந்து வலுவாக இருப்பதாக யுஓபி வங்கியின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வீ யீ சியோங் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்கான நிகர வட்டி வரம்பு 1.75 விழுக்காட்டிலிருந்து 1.80 விழுக்காடு வரை பதிவாகும் என்று யுஓபி வங்கி எதிர்பார்க்கிறது.

இவ்வாண்டின் 1.85 விழுக்காட்டிலிருந்து 1.90 விழுக்காடு வரையிலான முன்னுரைப்பைவிட அது குறைவாகும்.

யுஓபி வங்கியின் நிகர வட்டி வரம்பு இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 1.82 விழுக்காடாகச் சரிந்தது.

ஓராண்டுக்கு முன்பு அது 2.05 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்