யுஓபி வங்கியின் வருடாந்தர சீனப் புத்­தாண்டு நிதித் திரட்டு

யுஓபி வங்கியின் வருடாந்தர சீனப் புத்­தாண்டு நிதித் திரட்டு

2 mins read
1affba55-b5ee-4707-91e1-bad58d2755e2
நிதித் திரட்டு முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக, பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற இரவு விருந்தில், இரு கலைப் படைப்புகளை யுஓபி ஏலம் விட்டது. - படம்: யுஓபி

யுஓபி வங்கி தனது வரு­டாந்­தர சீனப் புத்­தாண்டு நிதித் திரட்டு முயற்­சி­யில் கிட்டத்தட்ட $2 மில்லியன் தொகை­யைத் திரட்­டி­யுள்ளது.

அதனைப் பயன்படுத்தி 2,000க்கும் மேற்பட்டோருக்கு நிதி உதவி வழங்க முடியும்.

அந்­தத் தொகை, ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்­ளிக் கைச்செலவு நிதித் திட்­டம், பிசி­னஸ் டைம்ஸ் வளர்ந்து வரும் கலை­ஞர்­கள் நிதித் திட்­டம், மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம் போன்ற நன்­கொடை அமைப்­பு­கள் மூலம் கலை, பிள்­ளை­கள், கல்வி தொடர்­பான நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும்.

யுஓபி - எஸ்எம்யு ஆசிய தொழில்முனைவோர் கழகத்தின்கீழ், சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்களின் புத்தாக்க முயற்சிகளுக்கு ஆதரவாக இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிதி திரட்டுக்கான இரவு விருந்து, வர்த்தக வங்கி வாடிக்கையாளர்களுக்காக நடத்தப்பட்ட பயிலரங்கம் ஆகியவற்றின் மூலம் $1,868,888 நிதி திரட்டப்பட்டதாக யுஓபி வங்கி புதன்கிழமையன்று (பிப்ரவரி 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிதித் திரட்டு முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக, பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற்ற இரவு விருந்தில், இரு கலைப் படைப்புகளை யுஓபி ஏலம் விட்டது.

அதில் ஒரு கலைப் படைப்பை நியோ குரூப் நிறுவனரும் தலைவருமான நியோ கா கியாட் $258,888க்கு ஏலம் எடுத்தார். மற்றொரு கலைப் படைப்பை $188,000க்கு எல்எச்என் நிர்வாகத் தலைவர் கெல்வின் லிம் வாங்கினார். ஜனவரி 29ஆம் தேதி, 40க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பங்கேற்ற போன்சாய் கலை பயிலரங்கு நடத்தப்பட்டது.

அந்தப் பயிலரங்கிற்குப் பிறகு, பிசி­னஸ் டைம்ஸ் வளர்ந்து வரும் கலை­ஞர்­கள் நிதித் திட்டம், மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம் போன்ற நன்­கொடை அமைப்புகளுக்கான இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்