தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யுஓபி வங்கி தலைமை நிர்வாகியின் ஆண்டுச் சம்பளம் $14.2 மில்லியன்

1 mins read
5c937b04-bfbc-4624-9ce0-08bf2ad62042
யுஓபி வங்கியின் தலைமை நிர்வாகி வீ ஈ சியோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2022 டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டில், யுஓபி வங்கியின் நிகர லாபம் புதிய உச்சமாக $4.6 பில்லியனைத் தொட்டது. இதன் பலனாக, அவ்வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளமும் கூடியுள்ளது.

2022க்கான திரு வீ ஈ சியோங்கின் ஆண்டுச் சம்பளம், $14.2 மில்லியனாக இருந்தது. 2021ல் அவர் பெற்ற $10.9 மில்லியன் சம்பளத்தைவிட இது 30.2 விழுக்காடு அதிகம்.

திரு வீ பெற்ற 2022 சம்பளத்தில் $1.2 மில்லியன் அடிப்படைச் சம்பளமும் $13 மில்லியன் போனசும் அடங்கும். மேலும், $37,577 பெறுமானமுள்ள அனுகூலங்களையும் அவர் பெற்றார்.

முன்னதாக, சிங்கப்பூரின் ஆகப்பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கியின் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தா, 2022 சம்பளமாக $15.4 மில்லியனைப் பெற்றுக்கொண்டதாக அவ்வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2021ல் அவர் பெற்ற சம்பளத்தைவிட இது 13.2 விழுக்காடு அதிகம்.