யுஓபி வங்கி ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் தொகையை அதன் தொடக்கநிலை ஊழியர்களுக்குக் கொடுக்கவிருக்கிறது.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க அவர்களுக்கு உதவும் நோக்கில், அவ்வாறு செய்யப்படுகிறது.
சிங்கப்பூரில் மூன்றாவது ஆகப் பெரிய வங்கியான யுஓபி, குழுமம் முழுதும் உள்ள 6,000 ஊழியர்களுக்குக் கூடுதலாக ஒரு மாத போனசை வழங்கும். அவர்களில் 600 பேர் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர்.
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்கு ஊழியர்களுக்கு உதவ சிங்கப்பூர் தேசிய சம்பள மன்றம் அண்மையில் செய்த பரிந்துரைக்குப் பிறகு, யுஓபி வங்கியின் அறிவிப்பு வந்துள்ளது.

