டெய்லர் சுவிஃப்ட் கலைநிகழ்ச்சியை முன்னிட்டு, யுஓபி கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்காக முன்கூட்டியே நடத்தப்பட்ட விற்பனையில் நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்தன.
ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
யுஓபி கடன் அட்டை வைத்திருப்போருக்குப் பிரத்தியேகமாக நடத்தப்பட்ட நுழைவுச்சீட்டு விற்பனை அது.
ஆறு இரவுகளுக்கான நுழைவுச்சீட்டுகளும் விற்று முடிந்ததாக ஏற்பாட்டாளரான ‘ஏஇஜி பிரசென்ட்ஸ் ஏஷியா’ பிற்பகல் 3 மணி அளவில் டுவிட்டரில் அறிவித்தது.
டிக்கெட் மாஸ்டரிடமிருந்து நுழைவுக் குறியீட்டைப் பெற்ற ரசிகர்கள் வெள்ளிக்கிழமை நண்பகலில் நடைபெறவிருக்கும் பொது விற்பனையில் நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம் என்றும் அது கூறியது.
தேசிய விளையாட்டரங்கில் 2024ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் மார்ச் 4 வரையும், மார்ச் 7 முதல் மார்ச் 9 வரையும் ஆறு இரவுகளுக்கு டெய்லர் சுவிஃப்டின் கலைநிகழ்ச்சி நடைபெறும்.