யுஓபி வங்கியின் சொத்து நிர்வாகப் பிரிவு $555 மில்லியனுக்கு விற்பனை

யுஓபி வங்கியின் சொத்து நிர்வாகப் பிரிவு $555 மில்லியனுக்கு விற்பனை

2 mins read
af9e9554-8467-49d7-821c-c01cab84b49e
யுஓபி வங்கி. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

யுஓபி வங்கி தனது சொத்து நிர்வாகப் பிரிவை ‘அலியான்ஸ் குளோபல் இன்வெஸ்டர்ஸ்’ நிறுவனத்திடம் 555 மில்லியன் வெள்ளிக்கு விற்கவுள்ளது.

இதன்மூலம் யுஓபி நல்ல வருவாய் ஈட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிவர்த்தனையின் மூலம், வரி விதிக்கப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 330 மில்லியன் வெள்ளி வருவாய் தங்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக யுஓபி புதன்கிழமை (ஆகஸ்ட் 5) கூறியது. ஒட்டுமொத்த சொத்துகளைக் கருத்தில்கொள்ளும்போது, யுஓபி தென்கிழக்காசியாவின் மூன்றாவது ஆகப் பெரிய வங்கியாகும்.

யுஓபி, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அதன் சொத்து நிர்வாகப் பிரிவை நடத்திவந்துள்ளது. அப்பிரிவை விற்பதன் மூலமாக ஆசியான் வட்டாரத்தில் தங்களின் வாடிக்கையாளர்களாக இருக்கும் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தகங்களுக்குச் சொத்து ஆலோசனை வழங்குவது, சொத்தை விநியோகிப்பது ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்தப்போவதாக அது தெரிவித்துள்ளது.

எட்டுச் சந்தைகள்

யுஓபி சொத்து நிர்வாகப் பிரிவு சிங்கப்பூர், புருணை, இந்தோனீசியா, ஜப்பான், மலேசியா, தைவான், தாய்லாந்து, வியட்னாம் ஆகியவற்றில் இயங்கிவருகிறது. அலியான்ஸ்எஸ்ஜி உடனான ஒப்பந்தத்தில் அனைத்தும் அடங்கும்.

ஒப்பந்தத்தில், நீண்டகாலத்துக்கான உத்திபூர்வ விநியோகப் பங்காளித்துவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன்கீழ், ‘அலியான்ஸ்ஜிஐ’ நிறுவனத்தின் உலகச் சேவைகளை யுஓபியின் வாடிக்கையாளர்கள் பெற முடியும். அத்துடன், விரிவுபடுத்தப்பட்ட, சீரமைக்கப்பட்ட முதலீட்டுத் தீர்வுகளும் வழங்கப்படும்.

இந்தப் பங்காளித்துவம், சொத்து ஆலோசனையில் இருக்கும் யுஓபியின் கவனத்தை வலுப்படுத்துவதாக அதன் தலைமை நிர்வாகியும் துணைத் தலைவருமான திரு வீ ஈ சியோங் தெரிவித்தார். வட்டார அளவில் அதன் வாடிக்கையாளர்களின் தேவைகள் பலதரப்பட்ட அம்சங்களுடன் மாறிவருவதுடன் அவர்களின் தேவைகள் உருவெடுத்துவரும் நிலையில் இந்தச் சூழல் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்கீழ் தற்போது யுஓபி சொத்து நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் எல்லா 500 ஊழியர்களும் ‘அலியான்ஸ்ஜிஐ’க்கு மாற்றப்படுவர். அவர்களைத் தொடர்ந்து வேலையில் வைத்திருக்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்யுஓபிவிற்பனைஒப்பந்தம்