தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வெளிநாட்டு மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு வழி பாடங்கள் கற்பிக்க முயலும் கல்வியமைச்சு

ஜப்பானிய மொழி கற்பிக்க செயற்கை நுண்ணறிவு

1 mins read
ef4a72d4-a7a0-4120-b6b9-70a9798a553f
மாணவர்களில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினருக்கு வகுப்பறைகளிலும் பள்ளிக்குப் பிறகும் ஜப்பானிய மொழியைக் கற்பதில் ஆதரவு கிடைக்கவில்லை. - படம்: அப்ஸ்பிலே‌ஷ்

தோக்கியோ: வெளிநாட்டு வேர்களைக் கொண்ட பிள்ளைகளுக்கு ஜப்பானிய மொழியைக் கற்பிக்க அந்நாட்டு அரசாங்கம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் இதர மின்னிலக்கத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பானிய மொழியைத் தவிர இதர பாடங்களையும் கற்பிக்க செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கான வழிகாட்டிகளை அரசாங்கம் உருவாக்கத் திட்டமிடுகிறது. ஜப்பானில் போர்ச்சுகீசிய, சீன, ஸ்பானிய மொழிகளில் பாடம் எடுப்பதற்கான ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது.

ஓராண்டுக்குள் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு வழிகாட்டிகளை நிறைவுசெய்ய ஜப்பானியக் கல்வியமைச்சு 2026 ஏப்ரலில் தொடங்கவிருக்கும் நிதியாண்டில் தேவையான செலவினத்தை வரவுசெலவுத் திட்டத்தில் சேர்க்கும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவிருக்கிறது.

2023ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, சிறப்புத் தேவையுடைய பள்ளி ஆகியவற்றில் சேர்க்கப்பட்ட கிட்டத்தட்ட 69,000 மாணவர்களுக்கு ஜப்பானிய மொழியில் குறிப்புகள் தேவைப்பட்டன.

அவர்களில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டு மாணவர்கள் வகுப்பறைகளிலும் பள்ளிக்குப் பிறகும் ஜப்பானிய மொழியைக் கற்க ஆதரவு பெறுவதில்லை.

செயற்கை நுண்ணறிவு வழங்கும் மொழிபெயர்ப்பு செயலியையும் இணைய வகுப்புகளையும் பள்ளிகளில் பயன்படுத்தத் தேவையான கட்டமைப்பை உருவாக்கக் கல்வியமைச்சு திட்டமிடுகிறது. அதன்மூலம் மாணவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தாலும் அவர்களுக்கு உயர்தரக் கல்வியை வழங்க முடியும்.

ஜப்பானிய மொழி உள்ளிட்ட பாடங்களைக் கற்பிக்கும் முறையுடன் வெளிநாட்டு மாணவர்களைப் பள்ளிகளில் சுமுகமாகச் சேர்ப்பதற்கான வழிகளை கல்வியமைச்சின் வழிகாட்டுதல் எடுத்துக்கூறும்.

ஆசிரியர்கள், ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் போன்றோரிடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வழிகளையும் ஜப்பானின் கல்வி, கலாசார, விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சு ஆராயும்.

குறிப்புச் சொற்கள்