சைக்கிளோட்டிமீது வேன் மோதி விபத்து: முன்னாள் நடிகருக்கு $3,000 அபராதம்

1 mins read
fe826f31-2b3e-4fae-bbbc-8c25c27b67d0
முன்னாள் உள்ளூர் நடிகரும் இயக்குநருமான இங் அய்க் லியோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சைக்கிளோட்டி ஒருவருடன் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக முன்னாள் உள்ளூர் நடிகரும் இயக்குநருமான இங் அய்க் லியோங்க்கு $3,000 அபராதம் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 15) விதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 27 வயது சைக்கிளோட்டிக்கு வலது முழங்கையில் எலும்பு முறிவு உட்பட உடலில் மற்ற பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டன.

63 வயது இங், தன்மீது சுமத்தப்பட்ட கவனக்குறைவாக வாகனம் ஓட்டி சைக்கிளோட்டிக்குக் கடுமையான காயம் விளைவித்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அபராதத்துடன் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கவும் பெறவும் இங்க்குத் தடை விதிக்கப்பட்டது.

2023 செப்டம்பர் 20ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் கேவனா இணைப்புச் சாலையிலிருந்து புக்கிட் தீமா சாலைக்குள் சென்றபோது பாதிக்கப்பட்டவர்மீது வேனை இங் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்