சிங்கப்பூரில் மின் சிகரெட்டு பயன்பாட்டிற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் மின் சிகரெட்டுகளைச் சமூக மன்றங்களில் ஒப்படைக்கலாம் என்றும் அவர்களுக்குத் தண்டனை ஏதும் விதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
23 சமூக மன்றங்களில் மின் சிகரெட்டுகளுக்காகக் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் மின் சிகரெட்டுகளைத் தயக்கமின்றிப் போடலாம்.
சுகாதார அமைச்சு. சுகாதார அறிவியல் ஆணையம், மக்கள் கழகம் ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை (ஜூலை 25) பின் த வேப் (Bin The Vape) திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
பொங்கோல், பூன் லே, உட்லண்ட்ஸ், பீஷான் உள்ளிட்ட தீவின் பல இடங்களில் உள்ள 23 சமூக மன்றங்களில் மின் சிகரெட்டுகளுக்காகக் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
go.gov.sg/bin-vapes என்ற இணைப் பக்கத்தில் மின் சிகரெட்டுகளுக்கான குப்பைத் தொட்டிகள் இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
இனிவரும் நாள்களில் உயர் கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் மின் சிகரெட்டுகளுக்காகக் குப்பைத் தொட்டி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சிகரெட்டில் ‘எட்டோமிடேட்’ என்னும் போதைப் பொருள் உள்ளது. அது நச்சுத்தன்மை கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
‘எட்டோமிடேட்’ கலந்த மின்சிகரெட்டுப் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சிகரெட் பயன்பாட்டிற்கு எதிராக விரைவில் கடுமையான சட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.