மின்சிகரெட்: ஏறத்தாழ 4,000 பேர் பிடிப்பட்டனர்

1 mins read
b499db01-abad-4e75-a448-ef20ccbb63c1
பிடிப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக அல்லது பயன்படுத்தியதற்காக ஜூலை மாதம் 1ஆம் தேதிக்கும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூரில் ஏறத்தாழ 4,000 பேர் பிடிப்பட்டதாக அக்டோபர் 23ஆம் தேதியன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது அதற்கு முந்தைய காலாண்டில் பிடிப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட 52 விழுக்காடு அதிகம்.

பிடிப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பிடிப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சிகரெட் பிரச்சினையை எதிர்கொள்ள சுகாதார மேம்பாட்டுக் கழகம் மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து செயல்படுவதாக சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் கூறின.

பள்ளிகளில் இப்பிரச்சினையை ஏற்படாமல் இருக்க, மின்சிகரெட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை வலியுறுத்தும் முயற்சிகள் முடுக்கிவிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்