பிடோக்கில் நடந்த சாலை விபத்தில் பாதசாரி ஒருவர் மரணமடைந்தார். புதன்கிழமை (அக்டோபர் 15) மாலை 5.15 மணியளவில் பிடோக் நார்த் அவென்யு 2ஐ நோக்கிச் செல்லும் பிடோக் நார்த் அவென்யு 3ல் நடந்த விபத்து பற்றிய தகவல் தங்களுக்குக் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
ஒரு 62 வயது ஆடவர் சுயநினைவின்றி சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்ததாக அதிகாரிகள் கூறினர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணை தொடர்கிறது.
சிங்கப்பூர் சம்பவங்களை பதிவிடும் சமூக ஊடக ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளி விபத்து நடந்தபின் இருந்த நிலவரத்தைக் காட்டுகிறது. சாலையில் ஒரு சிவப்பு வண்ண வாகனத்தைச் சூழ்ந்தபடி பல காவல்துறை அதிகாரிகள் காணப்பட்டனர்.