வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் சரிவு

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் சரிவு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Nov 2026 - 6:00 pm

1 mins read

சிங்கப்பூரில் புதன்கிழமை (நவம்பர் 18) முடிவடைந்த வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) ஏலக்குத்தகையில் பெரும்பாலான பிரிவுகளுக்கான கட்டணங்கள் சரிவைச் சந்தித்தன.

‘ஏ’ பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 6.4 விழுக்காடு குறைந்து $130,100 ஆகப் பதிவானது. நவம்பர் 4ஆம் தேதி இது $139,001 ஆக உச்சம் தொட்டிருந்தது.

இருப்பினும், சிறிய கார்கள், மின்சார வாகனங்களுக்கான ‘ஏ’ பிரிவு கட்டணம், பெரிய கார்களுக்கான ‘பி’ பிரிவைவிட அதிகமாகவே உள்ளது. ‘பி’ பிரிவு கட்டணம் 5.1 விழுக்காடு சரிந்து $125,600 ஆனது.

பொதுப் பிரிவான ‘இ’ பிரிவு கட்டணம் மட்டும் $135,998லிருந்து $136,000 ஆகச் சற்று உயர்ந்தது.

வணிக வாகனங்களுக்கான ‘சி’ பிரிவு கட்டணம் 0.2 விழுக்காடு குறைந்து $91,790 ஆகவும் மோட்டார் சைக்கிள் கட்டணம் 1.9 விழுக்காடு சரிந்து $10,489 ஆகவும் பதிவாகின.

2026ஆம் ஆண்டில் இன்னும் இரண்டு ஏலங்கள் மட்டுமே உள்ளன.

இதற்கிடையே, வாகன உரிமைச் சான்றிதழ் முறையின் மறுஆய்வு 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஏ’, ‘பி’ பிரிவுகளை இணைத்து, வாகனத்தின் பொதுச் சந்தை மதிப்பிற்கு ஏற்பக் கட்டணம் அல்லது கழிவு வழங்கும் ஐந்து அடுக்கு முறைக்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் நவம்பர் 3ஆம் தேதி நாடாளுமன்ற அமர்வில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்