வானில் பிறை நிலாவின் பின்னணியில் வெள்ளிக் கோள் கடக்கும் அரிய நிகழ்வு வெள்ளிக்கிழமை (மார்ச் 24) இரவு தென்பட்டது. சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளிலும் இதனை மக்கள் பலரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
நிலாவும் வெள்ளியும் ஒரே நேர்கோட்டில் இடம்பெறுவதுபோல காட்சியளித்தன.
Space.com இணையத்தளத்தைப் பொறுத்தமட்டில் வியாழன், வெள்ளிக்கிழமை இரவுகளில் வெள்ளிக் கோள் பொதுவாக வெறும் கண்களுக்குத் தெரியும்.
நிலாவும் வெள்ளியும் ஒன்றோடு ஒன்றுக்கு அருகில் இருப்பதுபோல தெரிந்தாலும், அவற்றுக்கு இடையிலான உண்மையான தொலைவு மில்லியன் கணக்கான கிலோமீட்டர் தூரம் இருக்கும்.
குறிப்பாகச் சொல்லப்போனால், பூமியிலிருந்து ஏறக்குறைய 375,700 கிலோமீட்டர் தொலைவில் நிலா உள்ளது. வெள்ளி கிரகமோ 185 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இரவுநேர வானில் உள்ள பிரகாசமான கோள்களில் ஒன்று வெள்ளி என்றாலும், நிலவின் பின்னால் ஒளிவதால் அதன் பிரகாசம் மேலும் 250 மடங்கு உயர்த்தி அழகாக காட்சியளிக்கிறது.