பொங்கோல் மின்னிலக்க வட்டார மேம்பாட்டுக் குத்தகை பெற்ற வெர்டன்ட் வியூ

பொங்கோல் மின்னிலக்க வட்டார மேம்பாட்டுக் குத்தகை பெற்ற வெர்டன்ட் வியூ

1 mins read
03deb148-e19b-44ff-9367-49acf96b9b1b
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தின் குத்தகையை ‘ஜேடிசி’ கழகம், வெர்டன்ட் வியூ குழுமத்திற்கு வழங்கியுள்ளது. - படம்: ஜேடிசி

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் உருவாக்கவிருக்கும் முதல் மேம்பாட்டுக்கான குத்தகையை ‘ஜேடிசி’ கழகம், வெர்டன்ட் வியூ குழுமத்திற்கு $43.5 மில்லியனுக்கு வழங்கியுள்ளது.

உணவு, பானத் துறையில் முத்திரை பதித்த இயோ ஹியாப் செங் நிறுவனத் தோற்றுவிப்பாளரின் கொள்ளுப் பேரனுடன் வெர்டன்ட் வியூ தொடர்புடையது.

ஜேஎம்டி ஹோல்டிங்ஸ் (JMD Holdings) குழுமம், டிசிஆர்இ பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் இணைத் தோற்றுவிப்பாளர் நிக்கலஸ் இயோ ஆகிய இரண்டு தரப்புகளின் கூட்டு முயற்சியில் அமைந்தது வெர்டன்ட் வியூ.

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் அமைக்கப்படவிருக்கும் மேம்பாட்டுப் பணியில் 224 அறைகள் கொண்ட ஹோட்டலும் சேவையுடன் கூடிய குடியிருப்பும் அமைந்திருக்கும்.

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தின் டவர் 98 (Tower 98) கட்டடத்தில் ஹோட்டலும் குடியிருப்பும் உருவாக்கப்படும்.

ஹோட்டல்கள், வசதியுடன் கூடிய குடியிருப்புகள், வீடுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் ஹெபிட் (Habyt) குழுமம் புதிய மேம்பாட்டுப் பணிகளைக் கவனித்துக்கொள்ளும்.

அதற்கான கட்டுமானப் பணிகள் மே மாதம் தொடங்கி 2027ஆம் ஆண்டின் முதற்பாதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கோலில் 50 ஹெக்டர் பரப்பளவில் உருவாகிவரும் வர்த்தகப் பூங்காவில் 8,140 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய மேம்பாடுகள் அமைக்கப்படவிருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்