ஃபேரர் பார்க் வட்டாரத்தில் முஸ்தஃபா சென்டருக்கு அருகே உள்ள 'வெர்டுன் ஹவுஸ்' கட்டடம், 'ஃபிரேகரன்ஸ்' குழுமத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் கோவிடம் விற்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை வாங்க முன்வந்தோரில் அவரே ஆக அதிகத் தொகையை வழங்கத் தயாராய் இருந்தார்.
இதன் மூலம் 'வெர்டுன் ஹவுஸ்' கட்டடத்தில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் $2.1 மில்லியனில் இருந்து $2.8 மில்லியன் வரை வழங்கப்படும். இந்தக் கட்டத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் $5.7 மில்லியனில் இருந்து $7.5 மில்லியன் வரை பெறுவர்.
1980களில் கட்டப்பட்ட 'வெர்டுன் ஹவுஸ்' கட்டடத்தின் முதல் மாடியில் நான்கு கடைகளும் உணவகங்களும் உள்ளன. மேல் மாடிகளில் 12 வீடுகள் அமைந்துள்ளன.

