வரும் பொதுத்தேர்தலில் 25 வயது நில அமைவு வடிவமைப்பாளர் வியர் நேதனை மக்கள் சக்திக் கட்சி அறிமுகம் செய்துள்ளது.
டிக் டாக் காணொளி ஒன்றின்வழி தாம் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்த திரு நாதன், வழக்கிற்கு மாறுபட்ட தம் பின்புலத்தையும் அரசியலில் சேர்வதற்கான காரணத்தையும் விளக்கினார்.
இவர் செய்துள்ள பல்வேறு மாறுபட்ட பணிகளில் இயற்கை வழிகாட்டி, தற்காப்புப் பயிற்றுவிப்பாளர், பண்ணை நிறுவனர் உள்ளிட்டவை அடங்கும்.
மத்தியக் கிழக்கு ஆய்வுப் பயணத்தையும் தாம் மேற்கொண்டுள்ளதாக திரு நேதன், அந்தக் காணொளியில் கூறினார்.
சிங்கப்பூருக்குப் பங்காற்ற மிகவும் விரும்புவதாகக் கூறிய திரு நேதன், கூடுதலான ஆற்றலுடன் பணியாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
திரு நேதனின் அனுபவமும் ஆர்வமும் இணையத்தில் கடும் விவாதத்தை எழுப்பியுள்ளன. இணைவாசிகளில் சிலர் இவரைப் பாராட்டினாலும் வேறு சிலர், அரசியல் பதவிக்கான அவரது தயார்நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

