தேசிய பூங்காக் கழகத்திற்குப் புதிய தலைவர்

தேசிய பூங்காக் கழகத்திற்குப் புதிய தலைவர்

படம்: பிரதமர் அலுவலகம்

29 Sep 2023 - 4:36 pm

1 mins read

நீண்டகால அனுபவம் கொண்ட அரசாங்க ஊழியர் லோ கம் யின் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய பூங்காக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்பார்.

அரசாங்கச் சேவைப் பிரிவின் நிரந்தரச் செயலாளராக இருக்கும் திரு லோ, அரசாங்கச் சேவையில் 33 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சனிக்கிழமை ஓய்வுபெறுவதாக தேசிய பூங்காக் கழகமும் தேசிய வளர்ச்சி அமைச்சும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தேசிய பூங்காக் கழகத்தின் தற்போதைய தலைவர் பென்னி லிம் சனிக்கிழமை பதவி விலகுகிறார்.

திரு லிம் 2018ஆம் ஆண்டிலிருந்து கழகத்தின் தலைவராக இருந்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
தேசிய பூங்காக் கழகம்பதவியேற்பு