புரோஜெக்ட் ஸ்மைல் நன்கொடை அமைப்பு, அத்தகைய மற்றோர் அமைப்பான ஹாவ் ரென் ஹாவ் ஷியுடன் இணைந்து உட்லண்ட்சில் உள்ள ஸ்ரீ சிவ கிருஷ்ணா கோயிலில் துடிப்பான மூப்படைதல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சி, சிறுபான்மை இன சமூகங்களைச் சேர்ந்த மூத்தோரை முக்கியமாகக் கருத்தில்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம் ஹாவ் ரென் ஹாவ் ஷியின் வீட்டு அத்தியாவசியப் பொருள் விநியோக நடவடிக்கை ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்துக்குத் தருவிக்கப்பட்டது.
அதோடு கலையோவிய, உடற்பயிற்சி, இந்திய மதிய உணவு விருந்து போன்ற அங்கங்களும் புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
