புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் மூண்ட தீயில் சிக்கிய 77 வயது மாது உயிரிழந்துவிட்டார்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 28) பெண்டிங் ரோட் புளோக் 126ல் உள்ள வீட்டில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து சுயநினைவில்லா நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த மாது இரண்டு நாள்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி முதல் தீச்சம்பவங்களால் அறுவர் மாண்டுவிட்டனர்.
