ரயில் நிலையங்களில் ஒலிக்கும் எட்டு வயது சிறுவனின் குரல்

ரயில் நிலையங்களில் ஒலிக்கும் எட்டு வயது சிறுவனின் குரல்

மதியிறுக்கம் குறித்து விழிப்புணர்வு
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Apr 2026 - 8:16 pm

1 mins read

உலக மதியிறுக்கம் விழிப்புணர்வு மாதமாக ஏப்ரல் மாதம் உள்ளது. அதற்கு ஆதரவு தரும் விதமாக எஸ்எம்ஆர்டி போக்குவரத்து நிறுவனம் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் 10, 11, 12 ஆகிய நாள்களில் எட்டு வயது சிறுவன் முகம்மது காலிஃப் முகம்மது காயீர் அப்தில்லாவின் அறிவிப்பு ரயில் நிலையங்களில் ஒலிக்கும்.

ரயில் தளவாடத்தில் வந்த பிறகு கதவுகள் திறக்கும்போது “தயவுசெய்து ரயிலிலிருந்து இறங்கும் பயணிகளுக்கு வழிவிடுங்கள். நமது பயணங்களை அனைவரையும் உள்ளடக்கிய பயணமாக ஒன்றிணைந்து மாற்றலாம்,” என ஆங்கிலத்தில் ஒலிக்கும்.

காலிஃப், மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன்.

ரயில் நிலையத்தில் சிறப்புத் தேவையுள்ள ஒரு பிள்ளையின் குரல் தளவாடத்தில் ஒலிப்பது இதுவே முதன்முறையாகும்.

காலிஃபின் அறிவிப்பு வட்ட ரயில் பாதை, கிழக்கு-மேற்கு பாதை, வடக்கு-தெற்கு பாதை, தாம்சன்-ஈஸ்ட்கோஸ்ட் பாதை ஆகியவற்றில் ஒலிக்கும்.

சிறுவனின் அறிவிப்பு காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒலிக்கும்.

குறிப்புச் சொற்கள்