எரிமலை வெடிப்பு: சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட மூவரைத் தேடும் பணி மீண்டும் தொடக்கம்

எரிமலை வெடிப்பு: சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட மூவரைத் தேடும் பணி மீண்டும் தொடக்கம்

1 mins read
7f1b5498-fdd9-44ad-b6e7-4eea1ff9c058
இந்தோனீசியாவின் டுகோனோ எரிமலை அருகே தேடுதல் பணியில் ஈடுபட்ட மீட்புக்குழுவினர். - படம்: ஏஎஃப்பி

டெர்னேட்: இந்தோனீசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, டுகோனோ மலை உச்சி அருகே சிக்கிக்கொண்ட மூன்று மலைஏறிகளைத் தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள்.

முன்னதாக, அம்மூவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், அவர்கள் உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்னும் சிறிதளவு நம்பிக்கை இருப்பதாக மீட்புப் பணியாளர்களும் உள்ளூர் மக்களும் கூறினர். எரிமலை சாம்பல் மூடிய டுகோனோ மலையின் சரிவுகளில் தேடுதல் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ள விவரத்தை டெர்னேட் தீவு நகரின் தேடுதல், மீட்பு அலுவலகத் தலைவர் திரு இவான் ரம்தானி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் சனிக்கிழமை (மே 9) தெரிவித்தார்.

“மீட்புக்குழுவில் 103 பேர் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை இன்றே மிட்கமுடியும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்,” என்றார் அவர்.

இந்தோனீசியாவின் வடக்கு மாலுகு மாகாணத்தில் உள்ள ஹல்மஹேரா தீவில் வெள்ளிக்கிழமை (மே 8) காலை எரிமலை வெடித்தது.

அப்போது மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 20 பேரில் 17 பேர் மீட்கப்பட்டதாக உள்ளூர் காவல்துறை கொம்பாஸ் தொலைக்காட்சியிடம் கூறியது.

குறிப்புச் சொற்கள்