வாகனங்களை மோதித் தள்ளி தப்ப முயன்ற ஆடவர் மீது 11 குற்றச்சாட்டுகள்

வாகனங்களை மோதித் தள்ளி தப்ப முயன்ற ஆடவர் மீது 11 குற்றச்சாட்டுகள்

1 mins read
f64352f0-b9ca-4372-add0-1bad8db5aa88
விசாரணை முடிந்த பிறகு இட்ரிஸ் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. - படம்: சிங்கப்பூர் காவல்துறை

காவல்துறை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த ஆடவர், மார்சிலிங் வட்டாரத்தில் வாகனங்களை மோதித் தள்ளி தப்ப முயன்ற போது பிடிபட்டார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (மே 28) நடந்தது.

அவர் மீது வியாழக்கிழமை (மே 30) புதிதாக 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

முகம்மது இட்ரிஸ் முஸ்பா எனும் அந்த 36 வயது ஆடவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஆடவர் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்துள்ளாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஆடவர் பயன்படுத்தியது, பதிவு நீக்கப்பட்ட வாகனம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆடவர் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இட்ரிஸ் போக்குவரத்து நெரிசலில் இருந்தபோது வாகனங்களை மோதித் தள்ளினார், பின்னர் லாரி ஒன்றின் மீது மோதினார்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இட்ரிஸ், மே 28ஆம் தேதி பொது இடத்தில் ஆயுதங்கள் ஏந்தி சென்றதற்காக மேலும் 2 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஆடவர் கத்தி மற்றும் கை முட்டிக் காப்பு ஒன்றை வைத்திருந்தார்.

இட்ரிஸ் மீது போதைப்பொருள் தொடர்பாக மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத கும்பல்களில் உறுப்பினராக இருந்ததாக மேலும் நான்கு குற்றச்சாட்டுகளை ஆடவர் எதிர்நோக்குகிறார்.

விசாரணை முடிந்த பிறகு இட்ரிஸ் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்