வருமான வரியைத் திரும்ப பெற இணையம் வழி பதிவுசெய்யும்படி சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடமிருந்து வரும் மின்னஞ்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தனிநபர்களும் நிறுவனங்களும் வருமான வரியை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் காலகட்டத்துக்கு முன்னர், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் அனுப்புவது போல மோசடியான மின்னஞ்சலைச் சிலர் பெறுவதாகக் காவல்துறை அறிவுறுத்தியது.
மின்னஞ்சலைப் பெறுவோர் வரியைத் திரும்ப பெற தகுதிபெற்றுள்ளதாகவும் அதைச் செயல்படுத்த இணைப்பு ஒன்றுக்குச் செல்லும்படியும் மின்னஞ்சலில் கூறப்படும்.
அந்த இணைப்புக்குள் செல்வோர் சிங்பாஸ் மூலம் விவரங்களை உறுதிப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுவர். அதையடுத்து வங்கி அட்டைகள், வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவுசெய்யும்படி இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அத்தகைய மின்னஞ்சலைப் புறக்கணிக்கும்படி சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் கூறியது.
ஆணையம் ஒருபோதும் வரிசெலுத்துவோரின் தனிப்பட்ட விவரங்களையும் வங்கிக் கணக்கு விவரங்களையும் கேட்காது என்று காவல்துறை எச்சரித்தது.
அளவுக்கு அதிகமாகச் செலுத்தப்பட்ட வரிகள் உரியவரின் வங்கிக் கணக்குகளுக்குத் தானாக அனுப்பி வைக்கப்படும் என்று அது குறிப்பிட்டது.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 18ஆம் தேதிவரை தனிநபர்கள் தங்கள் வருவாய் வரியைத் தாக்கல் செய்யலாம்.
தொடர்புடைய செய்திகள்
மோசடியில் சிக்கிக்கொள்ளாதபடி முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளும்படி காவல்துறை வலியுறுத்துகிறது.

