தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தற்காப்பு அமைச்சர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்குகள் குறித்து எச்சரிக்கை

2 mins read
5e41d99c-1a17-4a3a-935a-b04e8043b131
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னின் உண்மையான ஃபேஸ்புக் கணக்கு (வலது) என்பதை அவரது பெயருக்குப் பக்கத்தில் உள்ள நீலக் குறியீடு உறுதிப்படுத்துகிறது. - படம்: தற்காப்பு அமைச்சு/ஃபேஸ்புக்

சமூக ஊடகங்களில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் போல் ஆள்மாறாட்டம் செய்பவர்களுக்கு எதிராக தற்காப்பு அமைச்சு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

66 வயது அமைச்சர் போல் ஆள்மாறாட்டம் செய்துள்ள பல்வேறு போலி ஃபேஸ்புக் கணக்குகள் வலம் வருவது குறித்து தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக தற்காப்பு அமைச்சு பிப்ரவரி 14ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியது.

அமைச்சரின் உண்மையான ஃபேஸ்புக் கணக்கில் அவரது பெயருக்குப் பக்கத்தில் ஒரு நீலக் குறியீடு இருக்கும் என்றும் அந்தக் குறியீடு இல்லாத சந்தேகத்துக்குட்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு தற்காப்பு அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உதாரணத்துக்கு, டாக்டர் இங்கின் போலியான ஃபேஸ்புக் கணக்கில் பயனர் பெயர் @politician.eng.hen.39324 என்றும் இருக்கும். மாறாக, அமைச்சரின் உண்மையான ஃபேஸ்புக் கணக்கில் பயனர்பெயர் @ngenghen என்றும் இருக்கும்.

போலியான கணக்கு டாக்டர் இங்கின் உண்மையான ஃபேஸ்புக் கணக்கு போல் அச்சு அசலாகத் தோன்றும். இருப்பினும், உண்மையான கணக்கில் ‘grassroots advisor’ எனும் போலியான கணக்கில் ‘grassroots advisories’ என்று இருக்கும்.

அந்தப் போலியான கணக்கை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் ஃபேஸ்புக்கில் தேடும்போது அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அத்தகைய போலி கணக்குகள் பற்றி சமூக ஊடக தளத்தில் உள்ள அதன் ‘Report’ செயல்பாடு மூலம் தெரிவிக்கப்பட வேண்டும், மேலும் சந்தேகத்திற்கிடமான தோற்றமுடைய பயனர்களிடம் தங்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக்கூடாது என்று அமைச்சு மேலும் கூறியது.

அண்மை காலங்களில், சிங்கப்பூரில் உள்ள இதர அமைச்சர்களின் பெயர்களிலும் போலியான ஃபேஸ்புக் கணக்குகள் வலம் வந்தன. அவர்களில் ஒருவரான துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பெயரில் அக்டோபர் 2024ல் போலி ஃபேஸ்புக் கணக்கு தென்பட்டது.

சுகாதார அமைச்சர் ஓங் யி காங், மனிதவள மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், உள்துறை மற்றும் சமுதாய முடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவே லிங், பீஷான்- தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுப்பாட் ஆகியோரின் பெயரிலும் போலியான ஃபேஸ்புக் கணக்குகளைக் காண முடிந்தது.

குறிப்புச் சொற்கள்