தோலழற்சி காரணமாக 50 வயதுகளில் உள்ள ஆடவர் ஒருவர் அங் மோ கியோவில் உள்ள காப்பி கடையில் மாத்திரைகள் வாங்கியுள்ளார்.
Tong Mai 9 Gu Jiao Rou என்ற மாத்திரை இரண்டு ஆண்டுகளாக உட்கொண்ட அவருக்கு வயிற்றில் கடுமையான புண் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் Tong Mai 9 Gu Jiao Rou என்ற அந்த மாத்திரையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் உள்ளதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் இவற்றைச் சாப்பிடுவதால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.
EZ Empire Be Perfect என்ற பெயரில் விற்கப்படும் உடல் எடை அதிகரிக்கும் மருந்து, Re5hape hi Morning, Re5hape bye Night என்ற பெயரில் விற்கப்படும் உடல் குறைப்பு மருந்துகளைச் சாப்பிட வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இம்மருந்துகளைச் சாப்பிடுபவர்கள் மருத்துவர்களை அணுகுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.