தண்ணீர்க் குழாய் உடைந்ததால் கிளமெண்டி வட்டாரத்தில் பாதிப்பு

1 mins read
053e165e-4b77-4cda-a83a-7a50e8cc711c
உடைந்த குழாயைச் சரிப்படுத்துவதற்கான பணி அவசரமாக நடைபெறுவதாக ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வூ மெங் தெரிவித்துள்ளார். - படம்: டான் வூ மெங்/ஃபேஸ்புக்

இரவு நேரத்தில் தண்ணீர்க் குழாய் ஒன்று உடைந்ததில் கிளமெண்டி வட்டாரத்தில் வீடுகளும் வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டன.

அது தொடர்பாக ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வூ மெங் தமது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிளமெண்டி அவென்யூ 5, புளோக் 324க்கு அருகே அந்த உடைப்பு நிகழ்ந்ததாகவும் திங்கட்கிழமை (நவம்பர் 25) காலை 7.30 மணி அளவில் நேரில் சென்று நிலவரத்தை ஆராய்ந்ததாகவும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்து உள்ளார்.

தண்ணீர்க் குழாய் உடைந்ததால் அக்கம்பக்க வீடுகளும் வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவசர பழுதுநீக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகவும் டாக்டர் டான் குறிப்பிட்டு உள்ளார்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு பொதுப் பயனீட்டுக் கழகம், நிலப் போக்குவரத்து ஆணையம், கிளமெண்டி நகர மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் உதவி வருவதாகவும் அவர் தமது பதிவில் கூறியுள்ளார்.

புளோக்கிலிருந்து வெளியேறும் நடைபாதையில் பழுப்புநிறத்தில் நீர் ஓடுவதை, டாக்டர் டான் தமது பதிவில் இணைத்துள்ள காணொளி காட்டியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்