வேலை நேரத்தில் எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் நிற்கவேண்டியிருப்பதால் உடல்நலச் சிக்கல்கள் ஏற்படுவதாக வாட்சன்ஸ் நிறுவனக் கடை ஊழியர்கள் சிலர் கூறியிருந்தனர்.
ஊழியர் உரிமைக்கான 'வொர்க்கர்ஸ் மேக் பாசிபிள்' குழுவிடம் எட்டுப் பேர் இதன் தொடர்பில் புகாரளித்திருந்தனர்.
இவர்களில் முன்னாள் ஊழியர்களும் அடங்குவர். குறிப்பாகக் காசாளர்கள் வேலை நேரம் முழுவதும் அமரக்கூடாதென மேற்பார்வையாளர்கள் வலியுறுத்துவதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து 'வொர்க்கர்ஸ் மேக் பாசிபிள்' குழு, வாட்சன்ஸ் கடை ஊழியர்களின் நலனுக்காக சமூக ஊடகங்களில் இயக்கம் ஒன்றைத் தொடங்கியது.
ஆனால் அவ்வாறு விதிமுறை ஏதும் இல்லை என்று கூறிய வாட்சன்ஸ் நிறுவனம் இதன் தொடர்பில் ஊழியர்களின் பரிந்துரைகளைத் திரட்டுவதாகவும் அதன் அடிப்படையில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

