தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புத்தாண்டைக் கொண்டாட தயாராகும் சிங்கப்பூர் வட்டாரங்கள்

1 mins read
4373641b-d57a-4e40-825a-a1d6c27eebea
புத்தாண்டு கொண்டாட நிகழ்ச்சிகள் குறித்து மேலும் அறிய தங்கள் வட்டாரத்திற்கு அருகே இருக்கும் சமூக நிலையம், அக்கம்பக்கக் குழு, குடியிருப்பாளர்கள் குழு ஆகியவற்றை பொதுமக்கள் அணுகலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புத்தாண்டை வரவேற்க குடியிருப்பு வட்டாரத்தில் 28 சமூக கொண்டாட்டங்களுக்குத் தங்கள் அடித்தள அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாக மக்கள் கழகம் தெரிவித்தது.

இதில் ஆடலும் பாடலும், இசைக் கச்சேரிகள், செல்லப்பிராணிகளுக்கான “பாவ்-டி” போன்றவை சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளில் அடங்கும்.

இந்த நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட 70,000 குடியிருப்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தாண்டு நாளன்று வாண வேடிக்கைகளைக் காண விரும்பும் குடியிருப்பாளர்கள் அதைக் கண்டுகளிக்க தெம்பனிஸ், பூன் லே உள்ளிட்ட ஏழு வட்டாரங்களில் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன எனக் கழகம் மேலும் கூறியது.

பொதுமக்கள் இந்நிகழ்ச்சிகளைக் குறித்து மேலும் அறிய தங்கள் வட்டார சமூக நிலையம், அக்கம்பக்கக் குழு, குடியிருப்பாளர்கள் குழு ஆகியவற்றை அணுகலாம்.

குறிப்புச் சொற்கள்