உலகளாவிய செயற்கை நுண்ணறிவு முதலீடுகளின் எழுச்சியால் சிங்கப்பூர் பலனடைந்தாலும் சில ஆபத்தான சூழல்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது என்று வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.
ஈரான் போரால் மின்சார விலை அதிகரித்து, விநியோகத் தொடரில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் சிங்கப்பூரில் அதிக மின்னாற்றல் தேவைப்படும் மின்னணு உற்பத்தி நிறுவனங்கள், தரவு நிலையங்களின் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து, லாபம் குறையக்கூடும் என்றது அமைச்சு.
திங்கட்கிழமை (மே 25) வெளியிட்ட சிங்கப்பூர் பொருளியல் ஆய்வுக் கட்டுரையில், ஹீலியம், புரோமின், கந்தகம் போன்ற அரைகடத்திகளுக்கு மத்திய கிழக்கு முக்கிய விநியோகிப்பாளராக இருப்பதால் அவ்வட்டாரப் பூசல் விநியோகத் தொடரை பாதிக்கும் என்று அது சுட்டிக்காட்டியிருந்தது.
“மோதல் தொடர்ந்தால் விநியோக இடையூறுகள் ஏற்பட்டு சிங்கப்பூரில் அரைகடத்திகளின் உற்பத்தி மெதுவடையும் ஆபத்து உள்ளது,” என்று அமைச்சு குறிப்பிட்டது.

