சமய நிலையங்களில் அடையாளம் தெரியாத பொருள்

சமய நிலையங்களில் அடையாளம் தெரியாத பொருள்

1 mins read
48a3e9e8-5c82-48aa-9745-58abfd685f66
புதன்கிழமை சம்பவத்தில் கத்தோலிக்க சமய நிலையத்தில் காலை 10.45 மணிக்கு குறைந்தது நான்கு குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் இருந்ததாக செய்தித் தகவல்கள் கூறின. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

வாட்டர்லூ சாலையில் உள்ள கத்தோலிக்க சமய நிலைய கட்டடத்தைச் சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் தெரியாத பொருள் தூவப்பட்டிருந்தது புதன்கிழமை (ஜனவரி 18) காணப்பட்டது.

இதேபோல் செவ்வாய்க்கிழமையன்று ஆர்மினியன் சாலையில் உள்ள பைபிள் ஹவுஸ் என்ற கட்டடத்தில் வெள்ளை நிறப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் அழைக்கப்பட்டது.

நேற்றைய சம்பவத்தில் கத்தோலிக்க சமய நிலையத்தில் காலை 10.45 மணிக்கு குறைந்தது நான்கு குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் இருந்ததாக செய்தித் தகவல்கள் கூறின.

இதன்தொடர்பில். கத்தோலிக்க சமய நிலைய ஊழியர் ஒருவர் தான் காலை 9.00 மணிக்கு வேலைக்கு வந்தபோது கட்டடத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளை நிறப் பொருள் இருந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறினார். பின்னர் குடிமைத் தற்காப்புப் படையினர் விசாரித்ததில் எவருக்கும் உடல்நல பாதிப்பு இல்லை எனத் தெரியவந்ததாக அவர் விளக்கினார்.

செவ்வாய்கிழமை அன்று காலை 11.40 மணியளவில், "ஆர்மினியன் சாலையில் உள்ள ஒரு இடத்தில் வெள்ளைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது," என்று ஒரு புகார் பதிவாகியதாக காவல் துறை செவ்வாயன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

அது பொருளின் மாதிரியை எடுத்தது மற்றும் சோதனைகளில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கண்டறியப்படவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.