சட்டவிரோதமாக பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு அபராதம்

1 mins read
e5060361-1146-4521-b8ac-7f2122b2c432
படம்: SFA -

சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக பழங்கள், காய்கறிகள் இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று சிங்கப்பூர் உணவு அமைப்பும் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையமும் குயிங் யீ வர்த்தக நிறுவனத்திற்காகக் கொண்டு வரப்பட்ட லாரியில் சோதனை நடத்தியது.

அந்த லாரியில் கிட்டத்தட்ட 216 கிலோகிராம் எடையுள்ள காய்கறிகளும் பழங்களும் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கொண்டுசெல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அவை அனைத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

தவற்றைத் தடுக்காமல்விட்ட நிறுவனத்தின் இயக்குநருக்கு அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் உணவுப்பொருள்கள் பெரும் பாதுகாப்பு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக பழங்கள், காய்கறிகள் இறக்குமதி செய்பவர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்