அரசாங்க அமைப்புகள் ஏன் பகுதியளவு அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கின்றன?

அரசாங்க அமைப்புகள் ஏன் பகுதியளவு அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கின்றன?

1 mins read
5a44cac2-f7e2-40d2-b4ef-6e9a2baefa2e
உங்கள் முழு அடையாள அட்டை எண் தனித்துவமானது என்பதால், அது உங்களை மற்றவர்களிடமிருந்து துல்லியமாக வேறுபடுத்தும். - படம்: சாவ்பாவ்

உங்கள் பகுதியளவு அடையாள அட்டை எண்ணை மற்றவர்களும் கொண்டிருக்கலாம், அதனால்தான், உங்களை மற்றவர்களிடமிருந்து துல்லியமாக வேறுபடுத்துவதற்கு பகுதியளவு அடையாள அட்டை எண்கள் நம்பகத்தரமானவை அல்ல.

மேலும் அறிய, கீழுள்ள குறுங்காணொளியைக் காணுங்கள்!

அடையாள அட்டையின் பயன்பாட்டைப் புரிந்து பயன்படுத்துங்கள்

இந்த இரண்டு முக்கிய அம்சங்களை நினைவில் கொள்ளுங்கள்!

1. உங்கள் அடையாள அட்டை எண்ணின் ஒரு பகுதியை  மற்றவர்களும் கொண்டிருக்கலாம்.

-

உங்கள் அடையாள அட்டை எண்ணின் ஒரு பகுதியை  மற்றவர்களும் கொண்டிருக்கலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

சிலருக்கு அதே பெயரையும் அதே பகுதியளவு அடையாள அட்டை எண்ணையும் கொண்டிருக்கலாம்.

அதனால், அரசாங்க அமைப்புகள் பகுதியளவு அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்துவதை நிறுத்த உள்ளது.

2. உங்கள் முழு அடையாள அட்டை எண், மற்றவர்களிடமிருந்து உங்களைத் துல்லியமாக வேறுபடுத்தும்.

-

மற்றவர்களிடமிருந்து உங்களைத் துல்லியமாக வேறுபடுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அரசாங்க அமைப்புகள் உங்கள் முழு அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தும்.

அப்படிப்பட்ட கட்டாயம் ஏற்படாவிட்டால், அரசாங்கம் அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்தும்.

தனியார் துறையில், பகுதியளவு அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்துவதைக் குறித்த வழிகாட்டி நெறிமுறைகளுக்கு மாற்றம் செய்வதற்கு முன் அரசாங்கம் பொதுமக்களுடன் கலந்து ஆலோசிக்கும்.

இத்தகவலை உங்களுக்கு வழங்குவது: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
குறிப்புச் சொற்கள்