சிங்கப்பூர் காட்டுப் பன்றியிடம் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்

சிங்கப்பூர் காட்டுப் பன்றியிடம் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்

1 mins read
87fdf84d-8039-4cb0-aef9-4c18724cfd7a
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் காட்டுப் பன்றி ஒன்றின் சடலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் இருந்ததாக தேசிய பூங்கா வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

காட்டுப் பன்றியின் உடல் தீவின் வடமேற்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக வாரியம் கூறியது.

ஆப்பிரிக்க பன்றிக் காயச்சல் மனிதர்களைத் தாக்காது என்றும் அதனால் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆப்பிரிக்க பன்றிக் காயச்சல் பன்றிகள், காட்டுப் பன்றிகள் ஆகியவற்றின் இடையே மட்டும்தான் பரவும் என்று கூறப்பட்டது.

பன்றிகளிடையே பரவும் இந்த காய்ச்சலை விரைவாக கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தள்ளி இருக்கவும் அவற்றுக்கு உணவு வழங்க வேண்டாம் என்றும் வாரியம் கேட்டுக்கொண்டது.

பொது இடங்களில் மாண்டுகிடக்கும் காட்டு விலங்குகளைக் கண்டால் 1800-476-1600 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.