போதைப் பொருள் குற்றங்கள்: 2 மாதக் குழந்தையின் தாய் உட்பட 133 பேர் கைது

1 mins read
efa7c8a0-d16a-4c00-93ab-8bda173ab1f7
இரண்டு வாரம் நடத்தப்பட்ட சோதனையில் 133 பேர் கைது செய்யப்பட்டனர் (படம்: போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு) -

செம்பவாங் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 32 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் போதைமிகு அபின், ஐஸ், போதைப் பொருள் உபகரணங்கள் ஆகியவை இருந்தன.

அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது அச்சமயம் அவருடைய இரண்டு மாதக் குழந்தையும் வீட்டில் இருந்தது. குழந்தையின் தாயார் கர்ப்பமாக இருந்தபோதும், குழந்தை பெற்ற பின்னரும் போதைப் பொருள் உட்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் குழந்தைக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. குழந்தை, உறவினர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட இரண்டு வார சோதனையில் அந்த பெண் உள்ளிட்ட 133 பேர் கைது செய்யப்பட்டனர். ஜூரோங், தெம்பனீஸ், ஹவ்காங் ஆகிய வட்டாரங்களில் பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 17ஆம் தேதிவரை சோதனை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.