சட்டவிரோதக் கும்பல் உறுப்பினராகச் செயல்பட்டதாக மாது மீது குற்றச்சாட்டு

சட்டவிரோதக் கும்பல் உறுப்பினராகச் செயல்பட்டதாக மாது மீது குற்றச்சாட்டு

1 mins read
fe378e6f-fc00-4939-98ed-61e96ea7ebe1
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூவாண்டுகள் சிறைத் தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.  - படம்: பிக்சாபே

மாது ஒருவர் சமூக ஊடகத் தளத்தில் தாம் கும்பல் முழக்கங்களையும் ரகசியக் கும்பல் தொடர்புகளை வெளிப்படுத்தும் கைசைகைகளையும் காட்டும் காணொளியை சென்ற ஆண்டு ஜூலை மாதம் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோதக் கும்பல் உறுப்பினராகச் செயல்பட்டதாக அந்த 22 வயது மாது மீது ஏப்ரல் 29ஆம் தேதி குற்றஞ்சாட்டப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூவாண்டுகள் சிறைத் தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

அறிக்கையில் அந்த மாதின் பெயர் வெளியிடப்படவில்லை. அந்தப் பதிவு இன்னமும் சமூக ஊடகத் தளத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

ரகசியக் கும்பல் நடவடிக்கைகளை ஒருபோதும் சகித்துக்கொள்ளமாட்டார்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கும்பல்களுடன் தொடர்பு வைத்துக்கொள்பவர்கள் அல்லது கும்பல் கவிதைகளையோ முழக்கங்களையோ வாசிப்பதன் மூலம் கும்பல் உறுப்பினர்களைப் போல செயல்படுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கையை எடுக்கத் தயங்கமாட்டார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்