கார் விபத்து: 74 வயது மாது மருத்துவமனையில்

கார் விபத்து: 74 வயது மாது மருத்துவமனையில்

1 mins read
4457e504-0af7-4e79-ade6-10107e365205
விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட படங்கள், காரின் காற்றுப்பைகள் விரிவடைந்திருப்பதைக் காட்டுகின்றன. - படம்: ஷின்மின்
multi-img1 of 2

லோர்னி ரோட்டை நோக்கிச் செல்லும் அப்பர் தாம்சன் ரோட்டில் ஜூன் 12ஆம் தேதி தமது கார் சறுக்கியதைத் தொடர்ந்து 74 வயது ஓட்டுநர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பிற்பகல் 2.50 மணிக்கு விபத்து குறித்து தனக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

“74 வயது பெண் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்,” என்று காவல்துறை தெரிவித்தது.

அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சம்பவ இடத்தில் இருந்த ஒருவர், கார் நடைபாதை மேல் ஏற்றப்பட்டதைக் கண்டதாகக் கூறியதாய், ஷின் மின் நாளிதழ் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்