மூன்று தனிநபர்களுக்கு வெவ்வேறு தருணங்களில் விற்பனை செய்வதற்காக கேபோடையும் மின்சிகரெட்டுகளையும் வைத்திருந்ததாக நம்பப்படும் பெண்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
எங் சியாவ் பெய், 30, என்ற பெண்ணிடம் எட்டோமிடேட் கலந்த இரண்டு மின்சிகரெட்டுகள் இருந்ததாக நம்பப்படுகிறது. அவற்றை ஜூலை 19ஆம் தேதி டென்ட்ரே என்று அடையாளம் காணப்பட்டவரிடம் $124க்கு பொங்கோலில் உள்ள வீட்டில் விற்க எங் முற்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஜோனல்ஸ் என்ற மற்றொருவரிடம் $64க்கு ஒரு கேபோட்டை விற்க எங் முயன்றதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் 11ஆம் தேதி ஜெரல் என்பவரிடம் $64க்கும் $58க்கும் ஒரு கேபோட்டையும் ஒரு மின்சிகரெட்டையும் விற்க எங் விற்க முயன்றார்.
இம்மாதம் 23ஆம் தேதி பொங்கோல் ஃபீல்டில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின்போது சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் எங்கைப் பிடித்தனர்.
எங்கின் வீட்டைச் சோதனையிட்டபோது அதிகாரிகள் 58 மின்சிகரெட்டுகளைக் கைப்பற்றினர்.