தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிம் மோ மாடி வீட்டுக்கடியில் தாயும் சேயும் மரணம்

1 mins read
48fa9d0a-a208-4106-bbd1-0bd4bdadcc17
34 வயது மாதும் 3 வார ஆண் குழந்தையும் அசைவற்ற நிலையில் மாடிவீட்டுக்கடியில் காணப்பட்டனர். அவர்கள் அங்கேயே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: சாவ்பாவ்

கிம் மோ லிங்க் வீவக அடுக்குமாடி வீட்டின் கீழ்த்தளத்தில் 34 வயது மாது ஒருவரும் 3 வார கைக்குழந்தையும் டிசம்பர் 3ஆம் தேதி அன்று இறந்த நிலையில் காணப்பட்டனர்.

காலை 11.15 மணியளவில் தங்களுக்கு அதுபற்றிய விவரம் கிடைத்தது என்று காவல்துறை தெரிவித்தது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர்கள், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர் என்று உறுதிசெய்தனர்.

அந்த வழியே சென்ற திரு சென் என்ற வழிப்போக்கர் கொடுத்த அவசரத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

ஆரம்பக் கட்ட விசாரணையில் குற்றச் செயல்கள் நடந்துள்ளதற்கான அறிகுறிகள் இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது. விசாரணை தொடர்கிறது.

இம்மாதத்தில் நடந்துள்ள 2வது தாய்சேய் மரணச் சம்பவம் இதுவாகும். யூனோஸ் வட்டாரத்தில் கடந்த நவம்பர் 5 அன்று 33 வயது மாதும் ஒரு வயது குழந்தையும் வீவக வீட்டின் கீழ்தளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்