சாங்கி விமான நிலையத்தில் மாது கைது

1 mins read
abb68ada-677f-41a9-8342-a87a3d17d398
சாங்கி விமான நிலையத்தின் இடைமாற்றுப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் இடைமாற்றுப் பகுதிக்குள் செல்ல, தவறான முறையில் தமது நுழைவு அட்டையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 25 வயது மாது ஜனவரி 22ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

தென்கொரிய இசைக் குழுவைச் சேர்ந்த ஒருவரைக் காண்பதற்காக அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மாது நுழைவு அட்டையைப் பெறும் நோக்கில் விமான நுழைவுச் சீட்டை வாங்கியதாக விசாரணைகள் காட்டின.

சிங்கப்பூரை விட்டு வெளியேற எந்தத் திட்டமும் இல்லாததால் அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.