காவல்துறை அதிகாரிகள் மீது மதுபானம் ஊற்றிய மாது கைது

காவல்துறை அதிகாரிகள் மீது மதுபானம் ஊற்றிய மாது கைது

1 mins read
f4392922-d577-4513-8524-f83ac2bedda0
-

செந்தோசாவில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற 'ஸூக்அவுட்' வெளிப்புற நிகழ்ச்சியில் உள்ள மேடை சரிந்து விழுந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது மாது ஒருவர் மதுபானம் என நம்பப்படும் திரவத்தை அந்த அதிகாரிகள் மீது ஊற்றினார். காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமையை ஆற்றுவதற்கு இடையூறாக முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் என்று 32 வயதான அந்த மாது கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை வியாழக்கிழமை (டிசம்பர் 22) தெரிவித்தது.

செந்தோசா சிலோசோ கடற்கரையில் டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2.20 மணிக்கு அங்குள்ள மேடை சரிந்தது. கிளமெண்டி காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர புலனாய்வுக்குப் பிறகு அந்த மாதின் அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.

அவர் டிசம்பர் 7ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.