பொங்கோல் வீவக புளோக்கில் ஏற்பட்ட தீ விபத்துகள் தொடர்பில் பெண் கைது

பொங்கோல் வீவக புளோக்கில் ஏற்பட்ட தீ விபத்துகள் தொடர்பில் பெண் கைது

படம்: ஷின்மின் வாசகர்

19 Nov 2026 - 7:26 pm

1 mins read

பொங்கோல் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் குப்பைத் தொட்டியில் ஏற்பட்ட தீ உட்பட தொடர் தீச்சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 33 வயதுப் பெண்ணை புதன்கிழமை (நவம்பர் 18) காவல்துறை கைது செய்தது.

செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் புளோக் 657பி பொங்கோல் ஈஸ்ட்டில் உள்ள பொதுக் குப்பைத் தொட்டியில் தீப்பிடித்ததாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அது வேண்டுமென்றே மூட்டப்பட்ட தீ என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

நவம்பர் 5 முதல் 17 வரை அந்த புளோக்கில் மட்டும் 14 தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இதில் மூன்று தீ விபத்துகளைக் குடிமைத் தற்காப்புப் படையினரும் எஞ்சிய 11 தீ விபத்துகளைப் பொதுமக்களும் அணைத்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர் விசாரணையின் மூலம் அடையாளம் காணப்பட்ட அப்பெண் இதுப்போன்ற பல சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அப்பெண்மீது வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்