மதுபோதையில் கார் ஓட்டிய மாது கைது

1 mins read
58b57ffd-e102-4c34-ac92-2a9ab38b0747
ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட படத்தில், வெள்ளை நிற ‘பிஎம்டபிள்யு’ கார் ஒன்று கட்டடத்தின் முன்பகுதியில் உள்ள சாலையோரக் கல் மீது ஏறியிருந்ததைக் காணமுடிந்தது. - படம்: ஹோன் ஹாப்பி /ஃபேஸ்புக்

பென்கூலன் ரயில் நிலையத்திற்கு வெளியில், அக்டோபர் 20ஆம் தேதி அதிகாலையில் தமது காரை மோதியதாகச் சந்தேகிக்கப்படும் 28 வயது மாது மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காகக் கைதுசெய்யப்பட்டார்.

காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் சம்பவம் குறித்து தங்களுக்கு அதிகாலை 4.20 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறின.

24 வயது பெண் பயணி ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்தியதற்காக ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.

ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட படத்தில், வெள்ளை நிற ‘பிஎம்டபிள்யு’ கார் ஒன்று கட்டடத்தின் முன்பகுதியில் உள்ள சாலையோரக் கல் மீது ஏறியிருந்ததைக் காணமுடிந்தது.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்