‘கேபாட்’டுடன் பிடிபட்ட பெண்; குற்றவாளி எனத் தீர்ப்பு

1 mins read
d2113d9e-bd1b-497e-9305-f60d2cdad0e3
போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்தை டான் ஸின் யீ ஒப்புக்கொண்டார். - படம்: பிக்சாபே

ஒரே இரவு விடுதியில் ஒன்றரை மாதங்கள் இடைவெளியில் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளுடன் (கேபாட்) பிடிபட்ட பெண்ணைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டான் ஸின் யீக்குத் தற்போது 20 வயது.

2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி, செப்டம்பர் 28ஆம் தேதி ஆகிய நாள்களில் கோல்மன் ஸ்திரீட்டில் உள்ள எக்செல்சியர் கடைத்தொகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளுடன் இருந்த டான்னை சுகாதார அறிவியல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பிடித்தனர்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்தை டான் ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 12ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்