தாய், குழந்தை மரணத்தில் சந்தேகமில்லை: காவல்துறை

1 mins read
d7c695fd-9664-48d2-a17c-2bfb7e74291e
இந்தச் சம்பவத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் நடக்கவில்லை என்று காவல்துறை கூறியது. - படம்: பிக்சாபே

வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் கீழ்த்தளத்தில் 2023ல் ஒரு வயது மகளுடன் மாண்டுகிடக்கக் காணப்பட்ட தாயார், குழந்தையின் வளர்ச்சி குறித்து கவலைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி மகிழ்ச்சியின்றியும், தெம்பின்றியும் காணப்பட்டதையும் அவர் பெரும்பாலும் மகளுடன் படுக்கையில் இருந்ததையும் அவரது கணவர் உணர்ந்தார்.

சென்ற ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி பிற்பகலில் தேவாலயத்திலிருந்து வீடு திரும்பிய கணவர், இரு சடலங்களையும் புளோக்கின் கீழ்த்தளத்தில் கண்டார்.

அவர்களது மரணங்களின் தொடர்பில், ஜூலை 23ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.

மகன் பிறந்த பிறகு, 2019ஆம் ஆண்டில் தமது மனைவிக்குக் கோபம் அதிகரித்ததைக் கணவர் கண்டதாக காவல்துறை விசாரணை அதிகாரி கூறினார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அது தணிந்தது.

மகள் பிறந்த பிறகு, குழந்தையின் வளர்ச்சியும் எடையும் குறைவாக இருந்ததால், மனைவி கவலைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தம்பதிக்கு ஒரு மகன் இருப்பதால், அரசாங்க மரண விசாரணை நீதிபதி ஆடம் நக்கோடா, குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடவில்லை.

இந்தச் சம்பவத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் நடக்கவில்லை என்று காவல்துறை கூறியது.

மரண விசாரணை நீதிபதி நக்கோடா ஆகஸ்ட் 22ஆம் தேதி தமது தீர்ப்பை வழங்குவார்.

குறிப்புச் சொற்கள்