‘எட்டோமிடேட்’ எனப்படும் போதைப்பொருள் வகை கொண்ட 195 மின்சிகரெட்டுகளை வைத்திருந்ததாகப் பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் ‘எட்டோமிடேட்’ கொண்ட மேலும் 50 மின்சிகரெட்டுகளை அவர் வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மின்சிகரெட் தொடர்பாக 23 வயது லா ஜியா யி மீது வியாழக்கிழமை (செப்டம்பர் 4) ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவாகின.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஈசூன் வட்டாரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 20 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தி, அட்டைக் கத்தி, திருப்புளி ஆகியவற்றை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

