போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் வைத்திருந்ததாகப் பெண் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் வைத்திருந்ததாகப் பெண் மீது குற்றச்சாட்டு

படம்: பிக்சாபே

06 Nov 2025 - 6:24 pm

1 mins read

‘எட்டோமிடேட்’ எனும் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் வைத்திருந்ததாகப் பெண் ஒருவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எக்செல்சியர் கடைத்தொகுதியில் உள்ள இரவுவிடுதியில் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுடன் 20 வயது டான் ஸின் யி இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, அதிகாலை 1 மணிக்குச் சற்று முன்னதாக கிளப் பொசைடனில் இருந்தபோது, சிங்கப்பூரரான டான் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் வைத்திருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று கோல்மன் ஸ்திரீட்டில் உள்ள அந்த விடுதியில் அவர் அதே குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.

வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் டிசம்பர் 3ஆம் தேதியன்று நடைபெறும்.

மின்சிகரெட் புகைக்கும் பழக்கத்தினால் நரம்புப் பிடிப்பு, மூச்சுத் திணறல், வலிப்பு, மனநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மின்சிகரெட் தொடர்பான குற்றங்கள் பற்றி புகார் செய்ய 6684-2036 அல்லது 6684-2037 எனும் சுகாதார அறிவியல் ஆணையத்தின் அவசரகாலத் தொடர்பு எண்களை அழைக்கலாம். இந்த அவசரத் தொடர்பு எண்கள் பொது விடுமுறைகள் உட்பட நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்.

www.go.gov.sg/reportvape எனும் இணையப்பக்கத்துக்குச் சென்றும் புகார் அளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்
மின்சிகரெட்போதைப்பொருள்குற்றச்சாட்டு