பராமரிப்பு நிலையத்தில் 91 வயது தாயாரின் நிலை குறித்துப் பெண் விளக்கம்

பராமரிப்பு நிலையத்தில் 91 வயது தாயாரின் நிலை குறித்துப் பெண் விளக்கம்

1 mins read
83c8c9d7-bde8-40a8-a1d4-692b13520584
‘ரென் சி@உட்லண்ட்ஸ்’ பகல்நேரப் பராமரிப்பு நிலையம். - படம்: இன்ஸ்டகிராம்
Google News Preferred Icon

பகல்நேரப் பராமரிப்பு நிலையம் ஒன்றின் வரவேற்பறையில் 91 வயது தாயாரை அழைத்துவரச் சென்ற பெண் ஒருவர், தமது தாயார் அழுக்காகவும் ஆடைகளில் வாந்தியுடனும் இருந்ததைக் கண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமது தாயாருக்கு மிதமான மறதி நோய் இருப்பதாகவும் சில வேளைகளில் குழப்பமடையக்கூடியவர் என்றும் கூறியுள்ளார் 40 வயதுகளில் உள்ள அந்த மணமாகாத பெண்.

தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று ஏப்ரல் 1ஆம் தேதி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து அவரை அழைத்துவர ‘ரென் சி@உட்லண்ட்ஸ்’ என்ற மறதி நோயாளிகளுக்கான பகல்நேரப் பராமரிப்பு நிலையத்திற்குத் தாம் விரைந்து சென்றதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.

அவர் தமது பெயரையோ தம் தாயாரின் பெயரையோ வெளியிடவில்லை.

அது பற்றி அந்தப் பராமரிப்பு நிலையத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டு விசாரித்தபோது பெண்ணின் தாயார் அருகில் எல்லா நேரமும் ஊழியர்கள் இருந்ததாக நிலையத்தின் பேச்சாளர் கூறினார்.

அந்த மூதாட்டி தமது மகளுக்காகக் காத்திருந்தபோது ஊழியர்கள் அருகில் இருந்து கவனித்துக்கொண்டதை சிசிடிவி படக்காட்சிகள் மூலம் உறுதிசெய்ததாக அவர் சொன்னார்.

“மூதாட்டி காத்திருந்த நேரம் முழுவதும், அவரது அருகிலேயே பணியாளர்கள் இருந்ததை நாங்கள் எங்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உறுதி செய்தோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பராமரிப்புதாய்உட்லண்ட்ஸ்